தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’, சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘மகாநதி’ விஷாலுடன் இரும்புத்திரை, விஜய்சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் மற்றும் கன்னட ரீமேக் படமான யூடர்ன் ஆகிய படங்களிலும் சமந்தா நடித்து வருகிறார்

இந்த நிலையில் சமந்தா நடித்த தெலுங்கு திரைப்படமான ரங்கஸ்தாலம் என்ற திரைப்படம் மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதேபோல் விஷாலுடன் அவர் நடித்த இரும்புத்திரை வரும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதியும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘மகாநதி’ வரும் மே 9ஆம் தேதியும் ரிலீஸ் ஆகிறது.

மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதங்களில் மூன்று சமந்தாவின் படங்கள் ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.