ஹீரோயின் வாய்ப்பு தேடிவந்த பெண்ணை 3 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேர்ந்த பெண் ஒருவர் சினிமாவில் சிறு வேடங்களில் நடித்துவந்தார். அதுமட்டுமின்றி ஹீரோயின் வேடங்களுக்காக வாய்ப்புகள் தேடிவந்தார். இந்த நிலயில் அந்த பெண்ணுக்கு குமார் என்ற நபர் போன் செய்து தான் ஒரு இயக்குனர் என்றும் தன்னுடைய அடுத்த படத்தில் உன்னை நாயகி ஆக்குகிறேன். எனவே உன்னை படத்தின் தயாரிப்பாளரிடம் அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண் குமார் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார்.

நடிகையை அழைத்துச் சென்ற குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்தனர்.

சம்பவம் குறித்து அந்த பெண் போலீஸாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீஸார் அந்த 3 பேரையும் தேடி வருகின்றனர்.