உத்தரபிரதேச மாநிலத்தில் நாயை மூன்று இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உள்ள ஹத்ராஸ் எனும் பகுதியில் வசிக்கும் சந்தோஷ் தேவி எனும் பெண் ஆசை ஆசையாக பொமரேனியன் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டுக்கு அருகில் நிலைகுலைந்து போய் கிடந்துள்ளது.

அதை உடனடியாக கால்நடை மருத்துவமனையில் சேர்த்த தேவிக்கு அதிர்ச்சியானத் தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நாய் சில நபர்களால் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது என மருத்துவர்கள் கூற இதைக் கேட்டு அதிர்ந்த சந்தோஷ் தேவி போலிஸில் புகார் அளிக்க சந்தோஷ் தேவியின் வீட்டுக்குள் அருகே வாடகைக்கு குடியிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். பெண்களுக்குதான் பாதுகாப்பில்லை என அஞ்சினால் இனி விலங்குகளுக்கும் இந்த நாட்டில் பாதுகாப்பில்லாத சூழல் வந்துவிடுமோ என்ற அச்சத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.