நடிகை சமந்தா நிச்சயதார்த்தம்

தெலுங்கு நடிகா் நாகா்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவிற்கும் சமந்தாவுக்கும் திருமண நிச்சயதாா்த்தம் நடைபெற்றது.

நடிகை சமந்தாயும் தெலுங்கு நடிகா் நாகசைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தாா்கள். இப்பொழுது இவா்கள் இருவருக்கும் திருமண நிச்சயாா்த்தம் ஹைதராபாத்தில் நேற்று பெற்றோா்கள் முன்னிலையைில் நடைபெற்றது.

 

சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் ஜோடியாக நடித்தாா்கள். அப்போதிருந்தே இருவரும் நண்பா்களாக பழகி வந்தாா்கள்.  பின்பு இந்த நட்பு காதலாக மாறியது. இந்த காதல் தற்போது திருமண பந்தத்தில் முடிய போகிறது.

மிக பிரமாண்டமாக நடந்த இந்த நிச்சயதாா்த்த விழாவில் நாகா்ஜுனா, சமந்தா குடும்பத்தாா் மற்றும் நண்பா்கள் கலந்து கொண்டனா்.  சமந்தாவும் நாகசைதன்யாவும் மோதிரம் மாற்றிக் கொண்டாா்கள். இவா்களது திருமணம் இந்த வருடம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் அடுத்த வருடம் தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாா்களாம் என்ற தகவல் பரவி வருகிறது.

நாகா்ஜுனா மற்றும் அமலா தம்பதியின் மகனுமான நடிகருமான அகில் திருமணம் நிச்சயதாா்த்தம் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. அகிலுக்கும்  அவரது காதலிக்கும் வெளிநாட்டில் திருமணம் நடைபெற உள்ளது.

சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் நடைபெற்ற நிச்சயதாா்த்தம் குறித்த அறிவிப்பை நாகா்ஜுனா தனது ட்விட்டா் பக்கத்தில் தொிவித்து உள்ளாா். மேலும் அவா் கூறியதாவது, எனது அம்மாவே தற்போது மகளாகியுள்ளாா் இதை விட பொிய மகிழ்ச்சி எது இருக்கிறது என்று தனது மருமகள் சமந்தா பற்றி ட்விட்டா் வலைத்தளத்தில் தொிவித்துள்ளாா்.