ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசனின் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ படமானது கடந்த வார ஞாயிறுக்கிழமை (நவ.11) பூஜையுடன் ஆரம்பமானது என்று படக்குழுவில் ஒருவரான டி.முத்துராஜ் அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பானது இன்னும் சில வாரங்களில் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தற்போது, சிம்பு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தங்கள் நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில், சிம்பு போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இதில் கமல்ஹாசனுடன் மோதல் காட்சிகள் நிறைய உள்ளதாகவும், இந்த காட்சிகள் திரையரங்கில் வரும்போது படு மாஸாக இருக்கும் எனவும் நம்பத்தகுந்த திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இப்படத்தில் துல்குயர் சல்மான், நயன்தாரா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும், ‘இந்தியன் 2’ படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளார்.