2019ம் ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை வெறும் 4 படங்கள் மட்டுமே வசூலை பெற்று வெற்றி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த வருடத்தின் தொடக்கமாக பொங்கலுக்கு வெளியான அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ரஜினியின் பேட்ட படமும் வெற்றி அடைந்தது. எனவே, இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு சிறப்பான ஆண்டாக அமையும் என சினிமாத்துறையினர் செண்டிமெண்டாக நம்பினார். ஆனால், நடந்ததோ வேறு..

கடந்த ஜனவரி முதல் ஜூன் 7ம் தேதி வரை ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், சில படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளன என தியேட்டர் அதிபரும், பிரபல வினியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவர் கூறிய 4 படங்கள் விஸ்வாசம், பேட்ட, தடம், காஞ்சனா 3. இது தவிர மற்ற படங்கள் எதுவும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.