Accident: ஆண்டிப்பட்டி அருகே குலதெய்வ கோயிலுக்கு ஆட்டோவில் சென்றவர்கள் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

தேனி கம்போஸ்ட் ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் சென்ராயன். உசிலம்பட்டி அருகே உள்ள குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்தினருடன் இன்று ஆட்டோவில் சென்றார்.

இதையும் படிங்க பாஸ்-  கார் விபத்தில் சிக்கிய நடிகை: காப்பாற்றாமல் செல்பி எடுத்த மக்கள்

சென்ட்ராயன் குடும்பத்தினர் சென்ற ஆட்டோ ஆண்டிப்பட்டியை அடுத்த கொண்டமநாயக்கன் பட்டி அருகே சென்ற போது,. மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசுப்பேருந்து, ஆட்டோ மீது திடீரென மோதியது. இதில் சென்ராயன், அவரது மனைவி சுதா, மகள் அபிநயா ஆகியோர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  செல்பி பைத்தியம்: கழுத்திலே கடித்த பாம்பு; உயிரைவிட்ட இளைஞர்

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சென்ராயனின் மகன் மணிகண்டனும் இறந்தார். படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட இரண்டு பேருக்கு தேனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  48 வயதில் மகளுடன் குரூப் 4 தேர்வில் வென்ற விதவை தாய்!

இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் சாலை விதிகளை மதிக்காமல் வலது புறம் சென்றதே விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.