பிளாஸ்டிக் மக்கா தன்மை கொண்டது. அது நம் மண்ணோடு கலக்கும் போது மண்ணை மாசு படுத்துவதுடன் அதை மலடாக்குகிறது. மண்ணின் உயிர் தன்மையை அழித்து செடி கொடிகள் வளராமல் செய்து விடுகிறது. நாம் அன்றாடம் வீசி எரியும் பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள், கடல் விலங்குகள் தின்று உயிர் இழக்கிறது. இப்படி பல கொடிய ஆபத்துகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை ஏன் இன்னும் நாம் பயன்படுத்துகிறோம் ?? பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்க சில டிப்ஸ்.

இதையும் படிங்க பாஸ்-  பிளாஸ்டிக் விற்றால், வாங்கினால், சேமித்து வைத்திருந்தால் அபராதம் – தமிழக அரசு அதிரடி முடிவு !

1. தண்ணீர் பாட்டில்

தண்ணீர் அவசிய தேவை, பயணம் செய்பவர்கள், வெளி இடம் செல்பவர்கள் சுயமாக தண்ணீர் கொண்டு சென்றால், வெளியில் வாங்கும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை அளவை குறைக்கலாம்.

2. குப்பைகளை பிரித்தல்

நம் வீட்டில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து வைப்பது சிறந்தது. நம்மில் பலர் மக்கும் குப்பைகளை மக்கா குப்பையான பிளாஸ்டிக் பைகளில் போடுகிறோம். இது மிக மிக தவறான அணுகுமுறை!!

இதையும் படிங்க பாஸ்-  ஜனவரி 1 முதல் தெர்மாகோலுக்கும் தடை - தமிழக அரசு அறிவிப்பு

3. பை கொண்டு செல்லுதல்

மளிகை கடைகளிலும் சிறு கடைகளிலும் சிறிய பிளாஸ்டிக் பைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கடைகளுக்குச் செல்லும் போது, சுயமாக பை எடுத்து செல்லுதல் சிறந்தது, இதன் மூலம் சிறு பிளாஸ்டிக் பைகளை வாங்குவதை தவிர்க்கலாம்.

இதையும் படிங்க பாஸ்-  பொதுமக்கள் உஷார்.. பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்

4. ஷாப்பிங் மால்ஸ்

ஷாப்பிங் மால்களில் பிளாஸ்டிக் பைகளை வாங்குவதை தவிர்க்கலாம். சுயமாக துணி பைகளைக் கொண்டு செல்லலாம்.

5. பயோ டீகிரேடபிள் பிளாஸ்டிக்

மக்கும் தன்மை கொண்ட பயோ டீகிரேடபிள் பிளாஸ்டிக் பயன்படுத்துவது சிறந்தது. இவை எளிதில் மக்கி சுற்று சூழலுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கிறது.

நம் பூமியை பாதுகாப்பதில் நாமும் சிறு முயற்சிகள் எடுக்கலாமே !!