இயக்குனர் ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த படமாக இருந்தது. ஒரு சுவரை வைத்து வளரும் அரசியலும் அதன் பின் எளிய மக்கள் ஏமாற்றப்படும் அரசியலையும் மிக வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருந்தார் இயக்குனர் ரஞ்சித்.

படம் வந்த சமயத்தில் இது என் கதை என சில பிரச்சினைகள் எல்லாம் வந்தது அதையும் மீறி இந்தப்படம் சிறந்த வரவேற்பை பெற்றது.

கார்த்தி,கேத்ரின் தெரசா, கலையரசன் உள்ளிட்டவர்களின் நடிப்பும் மற்ற புதுமுக நடிகர்களின் பங்களிப்பும் நன்றாகவே வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் நான்காம் ஆண்டு விழாவை படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கொண்டாடி வருகிறது.