காலை 10 மணி ஆபீஸ் 9 மணிக்கு களைப்புடன் கூட்ட நெரிசலில் பயணித்து வீடு வந்ததும் கொஞ்ச நேரம் டிவி, உணவு, உறக்கம் மறு நாள் காலை மீண்டும் ஆபீஸ். சில சமயம் என்னடா வாழ்க்கை இது என்று சலிப்பு தட்டி வாழ்க்கை மீது ஒரு வெறுப்பு வரத்தான் செய்கிறது.

அப்படி சலிப்பு தட்டினால், மீண்டும் உத்வேகம் பெற சில டிப்ஸ்.

1. இருப்பதை பாராட்டுங்கள்…

நம்மில் பலர் அடுத்து எதை எட்டி பிடிக்கலாம் என்று ஓடிகொண்டிருங்கிறம் மேலும் பலர் தங்களிடம் இருக்கும் விஷயங்களில் திருப்தி இல்லாமல் இருக்கின்றனர் இன்னும் பலர் தங்களிடம் என்ன இருக்கிறது என்பதையே உணராமல் சோகக் கடலில் மூழ்கியிருப்பார்கள். நம்மிடம் இருக்கும் நன்மைகள் எண்ணி பார்க்கும் வாழ்க்கை மீதான சலிப்பு அதிகம் குறைவதாக கூறுகின்றனர் மனோதத்துவ நிபுணர்கள். முடி நரைக்கிறதே என்று சலித்துக்கொண்டவனை பார்த்து, நரைக்கக்கூட தன்னிடம் முடி இல்லையே என நினைத்தானாம் ஒருவன்.

2. அதிக எதிர்பார்ப்பு வேண்டாமே…

வருத்தத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று எதிர்பார்த்தது கிடைக்காமல் போவது. மிட்டாய் கேட்டு அழும் குழந்தை முதல் தன்னை முதியோர் இல்லம் விட்டு சென்ற மகனை நினைத்து அழும் முதியோர் வரை அனைவர்க்கும் உள்ள ஒன்று எதிர்பார்ப்பு. நாம் ஒருவரை அன்பு செஞ்சா அதே அன்பு நமக்கு திரும்ப கிடைக்கனும் என்று நினைப்பதில் தவறில்லை என்று கூறினாலும் அதுவும் ஒரு எதிர்பார்ப்பே. பலனை எதிர்பார்த்து செய்யும் ஒரு விஷயம் நம்க்கு பலன் அளிக்காமல் போகும்போது வருத்தப்படுகிறோம். மாறாக நடப்பதை நடக்கும் தருணத்தில் முழுமையாக அனுபவியுங்கள். அனுபவமாக எடுத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து வாழ்க்கையைத் தொடருங்கள்.

3. சின்ன சின்ன விஷயங்கள்…

நம்மை சுற்றி இருக்கும் இன்பங்கள் ஏராளம். ஒரு ஹெட்செட் இலவச இன்டர்நெட்டில் வாழ்க்கை கழிக்க பழகிவிட்ட நாம் நம்மை சுற்றி நடக்கும் இயல்பான அழகை ரசிக்க கற்றுகொள்ளவில்லை. அம்மாவின் காபி, காலை சூரியன், புதிய தளிர் எல்லாம் அழகே. வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு பல வருடங்களாக செல்லும் அதே பாதையில் உள்ள ஒரு பழம் வீடு, புதிதாக தொடங்கிய நவீன கடை பார்த்ததாக நினைவிருக்கா?

4. மீண்டும் குழந்தையாக…

“குழைந்தையாகவே இருந்திருக்கலாம்..” என்று ஒருமுறையாவது கூறி பெருமூச்சு விட்டிருப்போம். நாம் வளரும் போது நம்முடன் சேர்ந்து கடமைகளும் வளர்ந்து கொண்டே இருக்கறது, கடமைகளுக்கு ஈடாக கவலைகளும் வளர்ந்து, அதிகம் பணம் ஈட்ட வேண்டும், இதை முடிக்க வேண்டும் அதை முடிக்க வேண்டும் என்ற ஓட்டத்தில் மகிழ்ச்சியை தொலைக்கிறோம். அனைவரும் அறிந்த ஒரு ரகசியம் “மகிழ்ச்சி நம்முள்ளே”. சிறுவயதில் நீங்கள் விரும்பி செய்த விஷயம் என்ன?

5. கனிவுடன் இருங்கள்…

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை. துன்பமும் துயருமும் யாருக்கும் பாராபட்சம் காட்டுவது இல்லை. முடிந்தவரை நமக்கு அடுத்திருப்பவரிடம் கனிவுடன் பழக முயற்சியுங்கள். பிறரின் முயற்சியை உண்மையாக வாழ்த்தி பழகுங்கள். நாம் காட்டும் அன்பு நம்மிடமே திரும்பி வரும் என்பது பிரபஞ்ச நியதி. கடைசியாக எப்போது முகம் அறியாத ஒருவருக்கு உதவினீர்கள்?