அலாரம் ஸ்நூஸ் செய்துவிட்டு படுக்கும் அந்த கூடுதல் 5 நிமிடம் எப்போதும் சுகம் தான்! ஆனா அலுவலகத்துக்கோ கல்லூரிக்கோ அடிக்கடி தாமதமாக செல்வது, அல்லது முக்கிய சந்திப்புகளை தவறவிடுவது கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம். இதை தவிர்க்க சில டிப்ஸ்.

1. இரவு தூக்கம்

நம் உடம்பும் ஒரு இயந்திரம் தான். சரியாக இயங்க போதுமான ஓய்வு தேவை. 6 – 8 மணி நேர உறக்கம் மிகவும் அவசியம். காலை 5 மணிக்கு எழ திட்டமிட்டால் 9 – 11 மணிக்குள் தூங்க செல்வது அவசியம்.

2. தாமத உணவுக்கு நோ நோ

இரவு உணவை பொதுவாக 8 மணிக்குள் முடிப்பது சிறந்தது. அதற்கு மேல் திட உணவுகளை உட்கொள்ள வேண்டாம். மிகவும் பசித்தால் பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

3. மொபைல் வேண்டாமே

இரவு படுக்கையில் மொபைல் பயன்படுத்துவது இன்று பலருக்கு பழக்கமாக உள்ளது. வெகு நேரம் மொபைல் பயன்படுத்திவிட்டு தாமதமாக தூங்குவது அடுத்த காலை எழுவதை இன்னும் கடினமாக்குகிறது. படுக்க செல்லும் முன் லேப்டாப் உட்பட அனைத்து மின் சாதனங்களையும் ஆஃப் செய்து தூரமாக வைப்பது நல்ல தூக்கத்தை உறுதிப்படுத்தும்.

4. ரிலாக்ஸ் ப்ளீஸ்

தூங்க செல்வதற்கு முன் 10 நிமிடம் மனதை அமைதி படுத்த முயற்சிங்க. அந்த 10 நிமிடத்தில் அன்றைக்கான கவலைகள், டென்ஷன் அனைத்தையும் இறக்கி விடுவதும் நல்ல தூக்கத்தை உறுதிப்படுத்தி காலை சீக்கிரம் எழ உதவும். இது தியானமாக இருக்கலாம், இறை வணக்கமாக இருக்கலாம். இந்த 10 நிமிடத்தில் உங்கள் மனதிற்கு “நாளை 5 மணிக்கு எழ வேண்டும்” என்று சொல்லுங்கள்.

5. அலாரம் ட்ரிக்ஸ்

நீங்கள் காலை 5 மணிக்கு எழ திட்டமிட்டால் 4.45 மணிக்கு அலாரம் வைக்கவும். இப்படி செய்யும் போது, நாம் ஸ்நூஸ் செய்தாலும் அதிகபட்சம் 5.10 மணிக்கு எழும்பிவிடுவோம்.

இதில் எந்த டிப்ஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று கீழே பகிர்ந்துக்கோங்க, மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திக்கிறோம்.