பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் நடித்து வரும் படத்தில் முத்த காட்சியில் குடிபோதையில் வந்து 55 டேக்கள் வாங்கி ரகளை செய்து விட்டதாக செய்திகள் வைரலாகி வருகிறது.

தற்போது எல்லாம் முத்தக்காட்சியில் நடிப்பது என்பது சா்வ சாதாரணமாகி விட்டது. அதுவும் தமிழ் படங்களில் அவ்வளவு எளிதாக எல்லாம் முத்தக்காட்சிகள் என்பது குறைவு தான். ஆனால் பாலிவுட் சினிமாவில் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகி விட்டது. பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மது போதையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது முத்தக் காட்சி சீன்னை படமாக்கினார்கள். அதில் ராக்கி சாவந்த் 55 டேக்கள் வாங்கி படப்பிடிப்பில் ரகளை செய்துள்ளார்.

இது குறித்து ராக்கி சாவந்த் கூறியதாவது, இந்த மாதிரி முத்தக்காட்சியில் நடிப்பதற்கு எனக்கு கொஞ்சம் அசாதரணமாக இருந்த காரணத்தால் தான் அரை பாட்டில் மதுவை குடித்து விட்டு நடித்தேன். மது குடிக்காமல் இது போன்ற காட்சியில் என்னால் நடிக்க இயலாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

ராக்கி சாவந்த் இந்த படத்தில் குடிக்கு அடிமையான பெண்ணாக நடித்துள்ளார். படப்பிடிப்பில் மது போதையில் 55 டேக்கள் வாங்கியதை செய்தியாக வெளியிடுகிறார்கள். தற்போது எல்லாம் இயக்குநா்கள், தயாரிப்பாளா்கள் படத்தின் விளம்பரத்திற்காக என்ன என்ன தில்லாங்கடி வேலைகள் எல்லாம் செய்கிறார்கள் என்று விஷயம் அறிந்தவா்கள் கூறுகிறார்கள்.