குஜராத்தில் தன்னுடையக் காதலனாலேயே ஆபாசமாகப் படமெடுக்கப்பட்டு ஏமாந்துள்ளார் மாணவி ஒருவர்.

குஜராத் மாநிலம் வதோத்ராவைச் சேர்ந்த மாணவிக்கும் அவருடைய நண்பராக இருந்த பிரதீப் என்பவனுக்கும் இடையில் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைக் காதல் என நம்பிய அந்தபெண் பிரதீப்பிடம் நெருக்கமாகப் பழகியுள்ளார். ஆனால் பிரதீப் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதைப் புகைப்படம் எடுத்து வைத்துள்ளான்.

இதையும் படிங்க பாஸ்-  திருப்பதியில் நயன்தாராவுக்கு திடீர் திருமணமா?

ஒருக் கட்டத்தில் அந்த புகைப்படங்களைக் காட்டி அந்த பெண்ணிடம் இருந்து பணம் பறிக்க ஆரம்பித்துள்ளான். ஆனாலும் அந்த புகைப்படங்களை அழிக்காத பிரதீப் தனது நண்பர்களுடன் அதைப் பகிர்ந்துள்ளான்.

இதை பயன்படுத்திகொண்ட அவனது நண்பர்களும் அந்த பெண்ணைப் பலாத்காரம் செய்துள்ளனர். ஒருக் கட்டத்தில் போலிஸின் உதவியை அந்தப் பெண் நாடியுள்ளார். இதையடுத்து அவரது புகாரின் பேரில் பிரதீப், சவுகான் மற்றும் ரோஹித் ஆகிய 3 பேரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.