60-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்த தூர்தர்ஷன் -34 செயற்கைக்‍கோள்களுடன் சேவைபுரிந்து வருகிறது தூர்தர்ஷன்

மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்‍காட்சி தொடங்கப்பட்டு 60வது ஆண்டில் அடியெடுத்து வைக்‍கிறது. இதையொட்டி, சிறப்பு நிகழ்ச்சிகளுக்‍கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 1959ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி சோதனை முயற்சியாக தூர்தர்ஷன் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1965-ம் ஆண்டில் சேவையாக மாற்றம்பெற்றது.

அதன்பிறகு நடைபெற்ற பலகட்ட சோதனைகளுக்‍குப் பிறகு 1972-ல் மும்பை, அம்ரிட்சர் நகரங்களில் நாட்டின் முதல் தொலைக்‍காட்சியாக தூர்தர்ஷன் மலர்ந்தது. பின்னர் 1975-ல் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு நாடுகளுக்‍கு தூர்தர்ஷன் சேவை விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது தூர்தர்ஷன் தொலைக்‍காட்சி அருகுபோல் வேர்விட்டு 34 செயற்கைக்‍கோள்களுடன் ஆலமரமாய் தழைத்தோங்கி வளர்ந்து நிற்கிறது.

கல்வி, விவசாயம், விஞ்ஞானம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளுக்‍கு மட்டுமின்றி நாடாளுமன்ற நிகழ்வுகளை பிரத்யேகமாக ஒளிபரப்பும் தொலைக்‍காட்சி என 34 சேனல்களுடன் தன்னிகரற்ற சேவைபுரிந்து வருகிறது தூர்தர்ஷன் தொலைக்‍காட்சி.

60ம் ஆண்டில் தூர்தர்ஷன் அடியெடுத்து வைப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரச்சார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சாக்‍ஷி சேகர், தூர்தர்ஷனுக்‍கு 60 ஆண்டுகள் ஆனாலும், அதற்கு வயது ஆகிவிடவில்லை எனக்‍ கூறினார்.

இன்றைய டிஜிட்டல் தலைமுறையினரையும் கவர்ந்திழுக்‍கும் ஆற்றலோடு தூர்தர்ஷன் வெற்றிநடை போடுவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Recent Posts

நன்றி கூற வார்த்தைகள் இல்லை – தர்ஷன் வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷன் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். Biggboss Darshan says thank to his supporters - பிக்பாஸ்… Read More

54 mins ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

இந்தியா முழுவதும் வங்கிகள் இயங்கும் நேரம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. Public sector Banking hours is set right today - இந்தியாவில் பல பொதுத்துறை வங்கிகள் செயல்படுகிறது.… Read More

2 hours ago

பூம்ரா பந்துவீச்சில் எந்த மாற்றமும் இருக்காது – ஆஷிஷ் நெஹ்ரா நம்பிக்கை !

முதுகுத்தண்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ள இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூம்ராவின் பந்துவீச்சு முறையில் எந்த மாற்றமும் இருக்காது என நெஹ்ரா… Read More

6 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் போனேன்? ஏன் வெளியேறினேன்? – கவின் விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது முதல் வெளியேறியது வரை நடிகர் கவின் விளக்கம் அளித்துள்ளார். Actor Kavin felt sorry to his supporters - பிக்பாஸ் நிகழ்ச்சியில்… Read More

6 hours ago

தோனி அதுவரை விளையாட மாட்டார் – கம்பீர் கணிப்பு !

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாஜக எம்.பி யுமான கவுதம் கம்பீர் தோனியின் ஓய்வு குறித்து  சமீபத்தில் ஒரு ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் கருத்துத்… Read More

6 hours ago

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள புதிய திரைப்படம் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்துள்ளது. Vijay acting as college professoar in thalapathy 64 - பிகில்… Read More

10 hours ago