புது டெல்லி ஷானி தாம் பகுதியில் சாமியார் ஒருவர் தனது பக்தையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டு பலாத்காரம் செய்ததாக அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது ஆசிரமத்தில் இருந்த 600 பெண்களை காணவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டாடி மகாராஜ் என்ற சாமியார் ஒருவர் தனது பக்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் அந்த பெண் அச்சம் காரணமாக சாமியார் மீது அப்போது புகார் அளிக்காமல் இருந்தார். ஆனால் தொடர்ந்து தனக்கு மிரட்டல்கள் வந்ததால் சமீபத்தில் சாமியார் டாடி மகாராஜ் மீது புகார் கொடுத்தார்.

அதன்படி கடந்த 10-ஆம் தேதி டாடி மகாராஜ் மீது வழக்கு பதிவு செய்த ஃபதேபூர் பெரி காவல் துறையினர், இந்த புகாரை மாவட்ட புலனாய்வு பிரிவிக்கு அனுப்பினர். இதனையடுத்து சாமியார் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளான 376 (பாலியல் குற்றங்கள்), 377, 354, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ராஜஸ்தானின் ஆலவாஸ் பகுதியில் உள்ள டாடி மஹாராஜின் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்களை காணவில்லை என்ற புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. முன்னதாக ஆசிரமத்தில் 700 பெண்கள் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அது தற்போது 600 பெண்களாக மாற்றப்பட்டுள்ளதும் குழப்பமாக உள்ளது.