‘பாகுபலி’ பிரபாஸை டார்ச்சர் செய்த 6000 இளம்பெண்கள்: அதிர்ச்சி தகவல்

‘பாகுபலி 2’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு நாயகன் பிரபாஸ் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. ஆனால் அவருக்கு ‘பாகுபலி ‘படப்பிடிப்பின்போதும், படப்பிடிப்பு முடிந்த பின்னரும் சுமார் 6000 இளம்பெண்கள் லவ் டார்ச்சர் கொடுத்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் முடிந்த பின்னர் தான் திருமணம் என்ற முடிவுடன் இருந்த பிரபாஸ் தற்போது திருமணம் செய்ய பெற்றோரிடம் ஒப்புக்கொண்டாராம்., இதை தெரிந்து கொண்ட ஆந்திர இளம்பெண்கள் பிரபாஸுக்கு லவ் புரபோஸ் செய்து வருகின்றார்களாம். ‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பின்போதே துணை நடிகைகள் உள்பட பலர் அவருக்கு லவ் புரபோஸ் செய்ததாகவும், அவர்களிடம் இருந்து பிரபாஸ் தப்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் அவரிடம் புரபோஸ் செய்த பெண்களின் எண்ணிக்கை 6000ஐ தாண்டியுள்ளதாக பிரபாஸூக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இதுவரை இந்தியாவில் இருந்து மட்டுமே வந்து கொண்டிருந்த லவ் புரபோஸ் தற்போது வெளிநாட்டில் இருந்தும் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.