இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா தற்போது 6வது முறையா
கைகோர்க்கவுள்ளனர். இவர்களின் கூட்டணியில்
‘ஆறு’,’வேல்’,சிங்கம்’,’சிங்கம் 2′, ‘சிங்கம் 3’ ஆகிய படங்கள்
வெளிவந்து சூப்பர் ஹிட்டானது.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தில் இருப்பவர்
நடிகர் சூர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள்
பெரிதும் வெற்றிபெறவில்லை.

அதனால், தற்பொழுது நடிகர் சூர்யா பேமிலி சென்டிமெண்ட்
படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில்,
பேமிலி சென்டிமெண்ட் தான் அவரின் வெற்றிக்கு காரணம்.

இயக்குநர் ஹரி பேமிலி ஆடியன்ஸிற்கான படத்தை சூர்யாவை
வைத்து தயாரிக்க உள்ளார். ‘வேல்’ படத்தின் பேமிலி
சென்டிமெண்ட் போலவே இப்படமும் உருவாக உள்ளது.

நடிகர் சூர்யா வைத்து விரைவில் இயக்குநர் ஹரி படம் இயக்க
உள்ளார். இவர்களின் இந்த கூட்டணி ரசிகர்களிடையே மிகுந்த
கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.