ராஜுவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரும் உயிரோடு இருப்பது அம்மா போட்ட பிச்சை என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர்.  இவர்களை விடுவிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசும், ஆளுனரும் மாறி மாறி டிராமா செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு, ராஜுவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரும் உயிரோடு இருக்கிறார்கள் என்றால் அது அம்மா ‘ஜெயலலிதா’ போட்ட பிச்சை என கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஒரு பக்கம் மற்ற அமைச்சர்கள், 7 பேரின் விடுதலைக்கு ஒன்றும் செய்யவில்லை என்றாலும் வாய்ஜாலமாவது செய்து வருகிறார்கள். ஆனால் ஏதோ பேசவேண்டும் என்று செல்லூர் ராஜு பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.