இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கோடியை தொடுவது சர்வசாதரணமான விஷயமாக மாறிவிட்டது.

அதிலும், முன்னணி நடிகர்களின் திரைப்படம் நூறு கோடிகளின் அடிப்படையில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.

ஆனால், அந்த காலத்தில், அதாவது 1970-க்கு முன்னதான காலகட்டத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது லட்சங்களில் தான் இருந்தது.

அதிலும், ஜாம்பவான் நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி போன்றோர்களின் திரைப்படமே லட்சங்களில் தான் வசூல் சாதனை நிகழ்த்தின.

இந்நிலையில், சுமார் 70 வருடங்களுக்கு முன்பு 1948-ஆம் ஆண்டு, எஸ்.எஸ்.வாசன் தயாரித்து, இயக்கிய திரைப்படம் ‘சந்திரலேகா’. இப்படத்தில் எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.ராஜகுமாரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தை, பெரும் பொருட்செலவில், திரைப்படமாக்கியுள்ளார் எஸ்.எஸ்.வாசன்.

அப்போது, ‘சந்திரலேகா’ திரைப்படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி, சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. இப்படம் ரூ.1.55 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி அந்த கால கட்டத்தில் பெரும் சாதனை படைத்தது.

இப்படத்தின், இன்றைய மதிப்பு ரூ.400 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இப்படத்தை பற்றி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருமுறை குறிப்பிடுகையில், “சந்திரலேகா போன்ற ஒரு படத்தை இந்த காலத்தில் எடுப்பது அசாத்தியமானது” என்று பேசியுள்ளார்.

இப்படத்தின் க்ளைமேக்ஸில் முரசு நடனம் பிரமிக்க வைப்பதாய் இருக்கும். ஒருமுறை இப்படத்தை பார்த்தால் புரியும்.

சந்திரலேகா, திரைப்பட வரலாற்றில் ஒரு சகாப்தம்!