தல அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படம் நேற்று சென்சார் முடிந்து சான்றிதழை பெற்றுவிட்டதை அடுத்து ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் தேதி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

முதலில் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டதால் இந்த தேதியில் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய எந்த இயக்குனரும், தயாரிப்பாளரும் முன்வரவில்லை. ராம் இயக்கிய ‘தரமணி’ மட்டுமே ஆகஸ்ட் 11ல் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ‘விவேகம், 24ஆம் தேதிதான் ரிலீஸ் என்று தெரிந்தவுடன் பல திரைப்படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் தேதியை 10ஆம் தேதி என அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் படங்கள்

1. மகளிர் மட்டும்
2. பொதுவாக எம் மனசு தங்கம்
3. குரங்கு பொம்மை
4. மாயவன்
5. தப்புத்தண்டா
6. விஐபி 2
7. சத்யா
8. நெருப்புடா

மேற்கண்ட 8 படங்களும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்த பின்னரே உறுதி செய்ய முடியும்