8 நிமிட காட்சிக்கு ரூ.20 கோடி: கலக்கும் எஸ்.ஜே.சூர்யா


வாலி,குஷி போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் நடிப்பு ஆசையில் மயங்கி இருந்த வாய்ப்புகளை இழந்தவர். இப்போது கவனமாக கதையை தேர்வு செய்து வருகிறார். இறைவி படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது விஜயுடன் மெர்சல், நெஞ்சம் பறப்பதில்லை ஸ்பைடர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஸ்பைடர் படத்தில் இவருக்கு வில்லன் வேடம்.

இந்த படத்தில் இவர் நடிக்கும் ஒரு காட்சிக்காக ரூ.20 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் தொடர்பான காட்சிகளுக்கு மட்டுமே கோடிகளை கொட்டும் திரையுலகில் வில்லன் தோன்றும் காட்சிக்காக இவ்வளவு தொகையை ஒதுக்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.