கழிவறையில் வைத்து 9 வயது சிறுமி பலாத்காரம்: ரத்தம் சொட்ட சொட்ட கொடூரம்!

நாட்டின் தலைநகர் டெல்லியில் பொதுக்கழிவறை ஒன்றில் சிறுநீர் கழிக்க சென்ற 9 வயது சிறுமியை சிலர் பலவந்தமாக கொடூரமான முறையில் ரத்தம் சொட்ட சொட்ட பாலியால் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

டெல்லி வசண்ட் குஞ்ச் பகுதியில் சிறுமியின் தந்தை கடை ஒன்று வைத்திருக்கிறார். நான்காம் வகுப்பு படிக்கும் இந்த 9 வயது சிறுமி நேற்று இரவு தந்தைக்கு உதவியாக கடைக்கு வந்துள்ளார். அப்போது சிறுநீர் கழிக்க சிறுமி அருகில் உள்ள பொதுக்கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த சில மர்ம நபர்கள் சிறுமியை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். பின்னர் உடலில் இரத்தம் சொட்ட சொட்ட கிழிந்த ஆடையுடன் அழுதுகொண்டே வந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து நடந்தவற்றை சிறுமி கூறிய பின்னர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் சில ஆண்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறி காவல்துறையினர் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.