நடிகை ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். பட டிரெயலர் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த டிரெய்லரில் படு கவர்ச்சியான காட்சிகளும், ஆபாச வசனங்களும் இடம் பெற்றுள்ளது. எனவேதான் இப்படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படுக்கை சமாச்சாரங்களை கொஞ்சமும் வெட்கப்படாமல் ஓவியாவும், அவரின் பெண் தோழிகளும் பேசும் காட்சிகள் இந்த டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன. அதேபோல், பெண்கள் மது அருந்தும் காட்சிகளும், சூடான முத்தக்காட்சிகள், படுக்கை அறை காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

எனவே, அடல்ட் பட ரசிகர்களுக்கு இப்படம் ஒரு கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இது ஓவியா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், ஜொள்ளு பார்ட்டிகள் பலரும் இந்த டிரெய்லருக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இப்படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.