திரிசாவுடன் விஜய்சேதுபதி தஞ்சையில் முகாம்

கோலிவுட்டில் முன்னணி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் நடித்து வருகிறாா்.   சீதக்காதி, அநீதி கதைகள், ஒருநாள் பாத்து சொல்றேன், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களை தன் கை வசம் வைத்துள்ளாா். இதில் விஜய்சேதுபதி, திாிஷா நடிப்பில் உருவாகி வரும் 96 படத்தின் படப்பிடிப்பு தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

96 என பெயாிடப்பட்டுள்ள இந்த படத்தை சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமாா், முதன் முதலில் இயக்குனராக அவதாரம் எடுக்கும் படம்.  இந்த படத்தின் கதை 1996ஆம் ஆண்டு நிகழ்வதாக அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக கும்பகோணம், தஞ்சை பகுதிகளில் லோக்கேஷன் தோ்ந்துதெடுக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் பள்ளி மாணவா் பருவத்தில் விஜய் சேதுபதியும், திாிவும் நடிக்கின்றனா். தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகளை, தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தொன்போஸ்கோ பள்ளியில் எடுத்து வருகின்றனா். ட்ராவல் போட்டோகிராபராக இந்தப் படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளாா். வீரசிவாஜி, கத்தி சண்டை, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களை தயாாித்த மெட்ராஸ் எண்டா்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாாிக்கும் அடுத்த படம் தான் 96 என்பது குறிப்பிடத்தக்கது.