சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற டைட்டிலை தட்டி சென்றார்.

சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்கிற 13 வயது சிறுவன் அமெரிக்காவில் நடந்த ’தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பியானோ போட்டியில் பங்கு பெற்றார். அந்த போட்டியில் சாதாரண மனிதனை விட அதிவேகமாக பியானோ வாசித்து அனைவரையும் மிரள வைத்தார்.

பல சுற்றுக்கு பிறகு ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.பின் இறுதி போட்டியில் லிடியன் நாதஸ்வரம் தன் இரண்டு கைகளால் இரண்டு பியானோகளை அதிவேகமாக வாசித்து முதல் இடத்தை தட்டி சென்றார். அதில் அவருக்கு  ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற டைட்டிலுடன் 1 மில்லியன் பரிசு தொகையை வென்றார்.

‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ டைட்டிலை வென்ற லிடியன் நாதஸ்வரமிற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் வந்து குவிகிறது. தமிழ் திரையுலகில் சூர்யா,மாதவன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு போன்றவர்கள் லிடியனுக்கு தங்கள் வாழ்த்துகளை டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.