கேரளாவில் 48 வயது பெண்ணை பணம் மற்றும் நகைக்காக 25 வயது ஆண் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

 

கேரளாவில் சில தினங்களுக்கு முன் அனூப் செபெஸ்டின்(29) என்பவர் ஜூபி ஜோசப்(27) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.இவர்களின் திருமண நிகழ்வு புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வெளியானது.இதை கண்ட சில நெட்டிசகள் புது மண தம்பதிகளை கலாய்த்து வருகின்றனர்.

அதில் சிலர் அனூப் செபெஸ்டின் தோற்றம் வைத்து 25 வயது மிக்கவர் என்றும் ஜூபி ஜோசப் தோற்றம் 48 வயது பெண் போல் உள்ளதாக கலாய்த்தனர்.வேறு சிலர் ஜூபியின் சொத்து மதிப்பு 25 கோடிக்கு மேல் மற்றும் 100 சவரன் நகைக்காக அனூப் இவரை திருமணம் செய்து கொண்டதாக கடுமையாக விமர்சித்து கிண்டலடித்தனர்.

இந்நிலையில் இதைக்கண்ட தம்பதிகள் வேதனை அடைந்தனர்.ஆனாலும் இவர்களை நெட்டிசகள் விடவில்லை ,இவர்களுக்கு போன் செய்தும் குறுஞ்செய்தி அனுப்பியும் தொல்லை செய்தனர்.

இது குறித்து தம்பதிகள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இதை தொடர்ந்து இந்த செயலை தொடங்கியவர் யார் என்று போலீஸார் தேடி வருகின்றனர்.