ரஷ்யாவில் தன் வீடு மாடியில் குடியிருந்த 52 வயது நபரை துண்டு துண்டாக வெட்டி குளிர் சாதன பெட்டியில் மூதாட்டி பதப்படுத்திய சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவின் ஒரு புறநகர் பகுதி ஒன்றில் தெருவில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த தெரு நாய் தன் வாயில் மனித கை ஒன்றை கவ்விக்கொண்டு  தின்று கொண்டிருந்தது. அதை கண்டு பயந்த சிறுவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இச்சம்பவத்தை உறுதி செய்த பெற்றோர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல்  தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாருக்கு சம்பவத்திற்கு முந்தய நாள் வாஸ்லி ஷிலிஹாட்டிக் என்ற 52 வயதான ஆண் அப்பகுதியில் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் காணாமல் போன அந்த நபரின் வாடகை வீட்டிற்கு சென்ற போலீஸார் சோதனை செய்தனர்.

அப்போது அங்கிருந்த குளிர் சாதன பெட்டியில் மனித குடல் மற்றும் சில உறுப்புகள் பதப்படுத்த பட்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர். சம்பவத்தன்று இரவு அந்த பாட்டி வீட்டில்  ஒரு பொருளை அதிக சத்தத்துடன் வெட்டும் சத்தம் காலை வரை கேட்டதாக அக்கம் பக்கத்தினர் போலீஸாரிடம் கூறினர். குறிப்பிட்ட அந்த பாட்டி பன்றிகளை வெட்டும் நிறுவனதில் வேலை செய்பவர் என்றும் போலீஸாருக்கு தெரியவந்தது.

சந்தேகத்தின் பேரில் வீட்டின் உரிமையாளரான 80 வயது பாட்டியை போலீஸார் விசாரணை செய்து அவர் வீட்டை சோதனை செய்ததில் குறிப்பிட்ட அந்த ஆணின் உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டி குளிர் சாதன பெட்டியில் பதப்படுத்த பட்டிருந்ததை கண்டனர்.

போலீஸார் பல மணி நேர போராட்டதிற்கு பிறகு அந்த 80 வயது பாட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதற்கு முன் அப்பகுதியில் 7 பேர் காணாமல் போனது குறிப்பிடதக்கது.