தல ரசிகர்களுக்கு விவேக் ஓபராய் விடுத்த வேண்டுகோள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஐரோப்பிய நாடுகளின் பல இடங்களில் நடந்து வருகிறது. அனேகமாக இம்மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது டுவிட்டரில் ஒரு அட்டகாசமான ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். பெல்கிரேட் விமானப்படை தளத்தின் பின்னணியில் விவேக் ஓபராய் இருப்பது போல இந்த புகைப்படம் உள்ளது.

மேலும் அவர் தல அஜித் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். பெல்கிரேடில் மிக அதிகமாக பனிபொழுவு இருப்பதாகவும் இதனால் சூரியனையே பார்க்க முடியவில்லை என்றும், தல ரசிகர்கள் கொஞ்சமாக அன்பையும், நிறைய சூரிய வெளிச்சத்தையும் அங்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.