ஆண்டிப்பட்டியில் 16 வயது சிறுமியை 22 வயது இளைஞர் ஆசை வார்த்தை கூறி கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிப்பட்டியை சேர்ந்த பிரேமா(16) என்ற சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வந்த அழகுபாண்டி(22) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் பின்னர் இவர்கள் காதலர்களாக மாறினர்.

இதையும் படிங்க பாஸ்-  கோவிலுக்கு சென்ற 16 வயது சிறுமி - சீரழித்த ஆட்டோ ஓட்டுனர்கள்

அழகுபாண்டி பிரேமாவை பொய் சொல்லி தனது நண்பனின் அறைக்கு அழைத்து சென்று அவரை கல்யாணம் செய்துகொள்வதாக கூறி கற்பழித்துள்ளான். இதுகுறித்து அறிந்த பிரேமாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் அழகுபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.