செல்பி மோகத்தால் இளைஞர் ஒருவர் பாம்பு கடித்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று உலகம் முழுவதும் பலருக்கு பரவலக பரவிக்கொண்டிருக்கும் நோய் என்றால் அது செல்பி நோய் தான். எதை பார்த்தாலும் சரி உடனே செல்பி. இந்த செல்பி மோகத்தால் பலர் உயிரை விடுகின்றனர். எவ்வளவு தான் கூறினாலும் யாரும் திருந்திய பாடில்லை.

ஆந்திரா மாநிலம், நெல்லூர் அருகே சூளூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெகதீஸ். இவர் ரோட்டில் பாம்பை வைத்து வித்தை காண்பித்துக் கொண்டிருந்த பாம்பாட்டியிடம் கேட்டு ஒரு பாம்பை வாங்கி அதனுடன் செல்பி எடுக்க முற்பட்டார்.

அப்போது அந்த பாம்பு ஜெகதீசனின் கழுத்தில் கடித்தது. இதில் ஜெகதீசன் சம்பவ இடத்திலே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.