‘தங்கல் படத்தில் அமீர்கான் மகளாக நடித்த சைரா வாசிம், சமீபத்தில் டெல்லியில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் பின்பக்கம் உட்கார்ந்திருந்த ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருந்தது

இந்த விஷயத்தை நடிகை சைராவாசிம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், சைராவாசிமுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து ஒத்துழைப்பு தருவோம்’ என்று கூறியிருந்தது.

இந்த நிலையில் தற்போது அந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை செய்ததில் அவர் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்று வந்ததாக கூறினார். மேலும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.;