சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் நேரில் அழைப்பு விடுத்தும் அஜித், விஜய் உள்பட பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக அஜித் போன்றவர்கள் சென்னையில் இருந்து கொண்டே விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் கமல், ரஜினி போன்ற சீனியர் நடிகர்களே கலந்து கொண்டிருக்கும் நிலையில் மற்ற நடிகர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நடிகர் சங்கத்திற்கு ஒருசில நடிகர்கள் நெருக்குதல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது

எனவே இதுகுறித்து விளக்கம் கேட்டு அஜித், விஜய், தனுஷ், சிம்பு, த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட நடிகர், நடிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.