வேலூரில் கள்ளக்காதலால் நர்ஸ் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கள்ளக்காதல்களும் அதனால் ஏற்படும் கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கள்ளக்காதல் தப்பில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் பலர் சுதந்திரமாக கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூரை சேர்ந்த கதிரேசன் என்பவரது மனைவி அனிதா, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அனிதாவிற்கு  பைனான்ஸியரான அஜித்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

சமீபத்தில் இதனைப்பற்றி அறிந்த அனிதாவின் கணவர் கதிரேசன் அனிதாவை கண்டித்துள்ளார். இதனால் அனிதா அஜித்குமாருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.

இதனையறிந்த அஜித்குமார் அனிதாவை தனியாக அழைத்து சென்று அவரை கொன்று கொன்று ஏரியில் வீசியுள்ளார். போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அஜித்குமாரை தேடி வருகின்றனர்.