தற்போது ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் பலர் கிளம்பிவிட்டனர். ஒரு யுடியூப் அக்கவுண்ட் இருந்தால் ஒரு படத்தை விமர்சனம் செய்யும் தகுதி வந்துவிட்டதாக பலர் கருதி வருகின்றனர். மேலும் ஒருசிலர் படத்தை பார்க்காமலேயே விமர்சனம் செய்யும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது

இந்த நிலையில் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் இதுகுறித்து காட்டமாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

எல்லா ஆன்லைன் விமர்சகர்களையும் நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால் ஒருசிலர் படத்தின் வசூலை பாதிக்கும் அளவுக்கு வேண்டுமென்றே விமர்சனம் செய்கிறார்கள். இவர்கள் முடிந்தால் ஒரு புளுஃபிலிமுக்கு விமர்சனம் தயாரித்து அதை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு போட்டு காட்டட்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.