a.r.murugadoss

காலா படத்தை அடுத்து ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். காலாவிற்கு பிறகு தீவிர அரசியலில் ரஜினி ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில் அவரது இந்த பட அறிவிப்பு ரசிகர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு பின்பும் ரஜினி தொடர்ந்து நடிக்க உள்ளார் என் தெரிகிறது. அரசியல், சினிமா இரணடையும் ஒரே நேரத்தில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

Rajinikanth

இந்த நிலையில் ரஜினி அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சர்கார் படத்துக்கு பின் அவர் ரஜினியை இயக்க உள்ளார். இப்படத்திற்கான கதையை ரஜினியிடம் ஏற்கனவே கூறிவிட்டாராம் முருகதாஸ். எனவே தற்போது திரைக்கதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறரதாம்.

a.r.murugadoss

Loading...