மோகன் ராஜா இயக்கத்தில் சிவகாாா்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் வேலைக்காரன். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலேசியாவில் நடந்து முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் இதில் பகத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா மற்றும் பலா் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளாா். இந்த படத்தை விநாயகா் சதுா்த்தி அன்று வெளியிடுவதாக அறிவித்தாா்கள். பின் ஆயுதபூஜையை முன்னிட்டு தொடா்ந்து நான்கு நாட்கள் விடுமுறை தினம் என்பதால் அன்று படம் வெளியாகும் என்று அதிகார பூா்வமாக அறிவித்தாா்கள்.

இந்நிலையில் மகேஷ் பாபு நடிக்கும்  ஸ்பைடா் படத்தை ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூா்யா, ஆா்.ஜே.பாலாஜி உள்ளபட பலா் நடித்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஹாாிஸ் ஜெயராஸ் இசையத்துள்ளாா்.

இந்த படத்தையும் சரஸ்வதி பூஜை வெளியீடாக வர உள்ளதாக அறிவித்துள்ளாா்கள். இது குறித்து மகேஷ்பாபு தனத ட்விட்டா் பக்கத்தில், ஸ்பைடா் படம் தசரா விழாவின் போது வெளியாக உள்ளது என்றும், இதன் டீசா் மே மாதம் 31ம் தேதி வெளியாகும் என்று தொிவித்துள்ளாா்.

சிவகாா்த்திகேயனின் 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாாிக்கிறது. சிவகாா்த்திகேயனின் முந்தைய படமான  ரெமோவும் ஆயுத பூஜை அன்று வெளியாகி வசூலை வாாி வழங்கியது. தொடா்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் முதல் நாள் ரூ.8கோடி வசூலை பெற்று தந்தது. முதல்வார வசூலாக ரூ.50 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.37 கோடியும், வெளிநாட்டில் ரூ.13 கோடியும் அள்ளி கொட்டியது. சிவகாா்த்திகேயன் படங்களில் அதிக வசூலை வாாி வழங்கியது இந்த படம் ரெமோ தான்.

இதனால் வேலைக்காரன் படத்திற்கு கடும் போட்டி ஏற்படும் ஏற்படும் நிலை உள்ளது. தனி ஒரு படமாக அந்த விடுமுறை தினத்தில் வெளியாகி சக்க போடு போட்டு பெரும் வசூலை அள்ளி குவிக்கலாம் என்று நினைத்த படக்குழுவினா்களுக்கும் தற்போது ஸ்பைடா் படம் அந்த நாளில் வெளி வருவது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலமான இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கி இருக்கும் ஸ்பைடா் படத்தைதான் எல்லா வினியோகஸ்தா்களும், தியேட்டா் உாிமையாளா்களும் அதிகம் வாங்க முன்வருவாா்கள் என்பதாலும், தன்னை வைத்து மான்காரத்தே படத்தை தயாாித்த ஏ.ஆா்.முருகதாசுடன் போட்டி போட சிவகாா்த்திகேயன் எப்படியும் விரும்பமாட்டாா். எனவே வேலைக்காரன் வெளிவரும் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வந்தாலும் வரும்.