கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும்
படம் ‘பேட்ட’. இத்திரைப்பிடத்தில் வில்லனாக விஜய்சேதுபதி
நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று
வருகிறது.

இதற்கிடையில், ‘எந்திரன் 2.0’ படத்தின் புரொடக்ஷன் பணிகள்
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்து ஒரு
புதிய படத்தில் ரஜினி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.

ரஜினி நடிக்கும் இந்த புதிய படத்தை வெற்றி இயக்குனர்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என தகவல்
வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இன்னும் பெயர்
சூட்டப்படவில்லை.

சன்பிக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும்,
இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில்
துவங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெகுவிரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள்
மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்