மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கான பாடல் கம்போஸிங் சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற நிலையில் ஒரே வாரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், மூன்று பாடல்களை முடித்து கொடுத்துவிட்டாராம்.

மொத்தம் இந்த படத்தில் ஆறு பாடல்கள் என்ற நிலையில் இன்னும் மூன்று பாடல்களையும் வரும் வாரத்தில் முடித்துவிடுவாராம்

இதையும் படிங்க பாஸ்-  திரைத்துறையில் மீ டூ (#MeToo) புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் - நடிகர் விஷால்!

இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, பஹத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னமே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.