சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் அனிருத் மற்றும் டி.இமான் ஆகியோர் மாறி மாறி இசையமைத்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

‘இன்று நேற்று நாளை’ என்ற படத்தை இயக்கிய ரவிகுமார், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.