ரஹ்மானிடம் எனக்கு பிடித்த ஐந்து விஷங்கள்: சாய்ரா பானு

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் ஜீடிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் ஆக அவருடைய மனைவியும் முதன்முதலில் டிவியில் தோன்றினார்.

இந்த நிகழ்ச்சியை நடத்திய நடிகை சுஹாசினி, ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ராபானுவிடம் ரஹ்மானிடம் உங்களுக்கு பிடித்த ஐந்து விஷயங்களை கூறுங்கள் என்று கூறியவுடன் சாய்ராபானு கூறியதாவது:

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு நல்ல மனிதர், மனிதத்தன்மையுள்ள மனிதர். அற்புதமானவர், தலைக்கனம் இல்லாதவர், ஒரு சிறந்த தந்தை, இனிமையானவர், நகைச்சுவை உணர்வு மிக்கவர். மேலும் ஒரு நல்ல தந்தை மற்றும் கணவர், அதுமட்டுமின்றி எனக்கு தெரிந்து அவர்தான் உலகின் மிகச்சிறந்த மகன்’ என்று கூறினார்.