பிக்பாஸ் புகழ் ஓவியா கடந்த வாரம் வெளியேறிய நிலையில் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவருக்கு காதுக்கு மேல் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

ஓவியாவின் மனநலம் பூரணமாக குணமடைய கப்பிங் தெரபி என்ற சிறிய வகை அறுவை சிகிச்சை செய்வது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதின் அடிப்படையில் ஓவியா இந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டதாகவும், இதன் காரணமாகவே ஓவியாவின் காதுக்கு மேல் உள்ள முடி அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஓவியாவின் காதுக்கு மேல் உள்ள பகுதியை உற்று பார்த்தால் சிகப்பு நிறத்தில் ஒரு தழும்பு தென்படுவதை பார்க்கலாம். இதுதான் அந்த அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட தழும்பு என்றும் கூறப்படுகிறது.