கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு  மயக்க மருந்து கொடுத்து உல்லாசம் அனுபவித்த  டான்ஸ் மாஸ்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரத்தை சேர்ந்த ராகுல் என்பவன் நடனப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தான். 19 வயதே ஆகும் இவனிடம் அப்பகுதியில் உள்ள பலர் பயிற்சி பெற்று வந்தனர்.
காமவெறி கொண்ட இந்த மிருகம், தன்னிடம் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களை கற்பழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளான். அப்படி சமீபத்தில் ஒரு பெண்ணிற்கு மயக்க மருத்து கொடுத்து கற்பழித்துள்ளான். அந்த பெண்ணிற்கு நீண்ட நேரம் மயக்கம் தெளியாததால் அவர் நடனப் பள்ளியிலே மயங்கிய நிலையில் இருந்துள்ளார். மாணவி நீண்ட நேரம் அகியும் வீட்டுக்கு வராததால் இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.
போலீஸார் ராகுலிடம்  விசாரிக்கவே அவன் அனைத்து உண்மைகளையும் உளறினான். இதையடுத்து போலீஸார் அந்த கேடுகெட்டவனை  கைது செய்தனர்.