ஆதி -சமந்தா நடிப்பில் வரவிருக்கும் த்ரில்லர் திரைப்படம் யு டர்ன், இப்படம் கன்னடத்தில் வெற்றிபெற்ற படத்திலிருந்து ரீமேக் செய்யப்படுகிறது. சமந்தாவின் முகத்துடன் சில வாரங்கள் முன் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் அதன் செகண்ட் லுக் போஸ்டர் ஆதியின் முகத்துடன் நேற்று வெளியிடப்பட்டது. தெலுங்கு மற்றும் தமிழில் இப்படம் வெளியாகிறது.

படம் ஒரு வித்தியாசமான நபரை பற்றியதாக தெரிகிறது. சாலையில் பிச்சை எடுக்கும் ஒரு குள்ள மனிதரை பற்றியதாக தெரிகிறது இவருக்கு சமந்தாவுக்கு இணையான கதாபாத்திரம் என்றும் தெரியவருகிறது. இதற்குள் என்ன த்ரில்லர் என்பதும் சஸ்பென்ஸாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றி இயக்குனர் பவன் டுவிட்டரில் தெரிவித்ததாவது.ஒரு முறை பீட்டர் டிங்க்லேஜின் ஆங்கிலப்படம்  பார்ப்பதற்காக சென்றபோது இவரை சந்தித்தேன் . 1991ல் இருந்து பெங்களூர் ஜே.பி நகரில் சுற்றி வருகிறேன் இவரை போல மனிதர்களை பார்த்து வருகிறேன். இவரை வைத்து கதை செய்ய வேண்டும் என்று கதை தயார் செய்து அதை யு டர்னாக படமும் பிடித்துவிட்டேன் என்கிறார்.