ஈரோட்டில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானதைக் கண்டு கணவன் கதறி அழுதது பார்ப்பவர்களின் மனதை உருக்கும் விதமாக இருந்தது.

ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மனைவி முபின்தாஜ் . இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி காலமானார்

இந்நிலையில் இன்று முபின்ராஜ் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் சென்ற ஆட்டோவும் முபின்தாஜ் ஸ்கூட்டியும் மோதிக்கொண்டன. இதில் நிலை தடுமாறிய முபின்தாஜ் ரோட்டில் விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து முபின்ராஜ் மீது ஏறி இறங்கியது. இதில் முபின்தாஜ் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மூச்சுத்திணறலால் காலமானார்.

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு பதறியடித்துக்கொண்டு வந்த அக்பர் அலி தனது மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுதார். இது பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைக்கும் விதமாக இருந்தது.