A1 movie teaser – சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏ 1 டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கதாநாயகனாக மட்டுமே நடிக்க தொடங்கிய பின் நடிகர் சந்தானத்திற்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும், அவரின் தில்லுக்கு துட்டு 2 படம் சமீபத்தில் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில், ராஜ் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ஏ1 திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக புதுமுகம் தாரா நடித்துள்ளார்.

சந்தானம் படத்தில் வழக்கமான இடம்பெறும் நக்கலான வசனங்கள் இந்த டீசர் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.