Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் என்னைப்பற்றி மிமி கிரியேட் செய்தவர்கள் இனி ஓய்வு எடுத்து கொள்ளலாம்: ஆர்த்தி

என்னைப்பற்றி மிமி கிரியேட் செய்தவர்கள் இனி ஓய்வு எடுத்து கொள்ளலாம்: ஆர்த்தி

aபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த ஞாயிற்றன்று நடிகை ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அவர் கமலிடம் பேசுகையில், எனக்கு நடிக்க தெரியவில்லை என்றும் அதனால் தான் வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார்.

இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களையும், மீம்ஸ்ஸ்களையும் சமூக வலைதளங்களில் பார்த்த ஆர்த்தி இதற்கு பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், என்னைப்பற்றி மிமி கிரியேட் செய்து பிசியாக இருந்தவர்கள் இனி ஓய்வு எடுத்து கொள்ளலாம். கேலியாக இருந்தாலும் என் மிமிக்கள் நல்ல கற்பனை வளத்துடன் காணப்பட்டது. அனைவருக்கும் நன்றி என்று கூறியிருந்தார்.