Aadai Amalapaul – ஆடை படத்திற்காக நடிகை அமலாபால் ஆடையே இல்லாமல் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக அப்படத்தின் இயக்குனர் ரத்ன குமார் கூறியுள்ளார்.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள திரைப்படம் ஆடை. ஏற்கனவே ஆடை எதுவுமின்றி பேப்பரை சுற்றியபடி அமலாபால் இருக்கும் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அமலாபால் அதை கண்டுகொள்ளவில்லை.

இப்படத்தில் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்த டீசரில் நிர்வாண கோலத்தில் அமலாபால் தோன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற நிர்வாண காட்சிகளை படக்குழு 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியதாகவும், அத்தணை நாளும் அமலாபால் ஆடையின்றியே படப்பிடிப்பில் கலந்து கொண்டார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் ரத்னகுமார் ‘இப்படத்தில் அமலாபால் ஆடையின்றி தோன்றும் காட்சிகள் சிறிது நேரம்தான். ஆனால், அதையும் தாண்டி பல முக்கிய விஷயங்கள் இப்படத்தில் பேசப்பட்டுள்ளன. தனிமனித சுதந்திரம் மற்றும் சுய ஒழுக்கம் பற்றி இப்படம் பேசுகிறது. இப்படத்தில் அமலாபால் பைக் ஓட்டும் காட்சி மற்றும் சண்டை காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அவரின் திரை வாழ்வில் ஆடை மிகவும் முக்கிய படமாக இருக்கும்’ என அவர் தெரிவித்தார்.