உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகின்றது.

கமல்ஹாசன் மிரட்டப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின், அவருடைய கருத்து தமிழக மக்களின் கருத்தை பிரதிபலிப்பதாக கூறினார்.

இந்த நிலையில் தமிழக ஆம் ஆத்மி தலைவர் வசீகரன் நேற்று கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளார். இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தெரிகிறது.