அமீர்கானின் மற்றுமொரு தங்கல்தான் சீக்ரெட் சூப்பர் ஸ்டார்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான தங்கல் திரைப்படம் மொழி, மாநிலங்களைக் கடந்து அனைத்து அனைவரிடமும் குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரிதாக வரவேற்கப்பட்டு சிறப்பாக வெற்றிபெற்றது.பெண்களின் முன்னேற்றத்தை வலியுறுத்தும் கதை அம்சத்தை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் 70 கோடி செலவில் எடுக்கப்பட்டு 2000 கோடி வசூலை ஈட்டி ‘பாக்ஸ் ஆபீஸ்’ வெற்றிபெற்றது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அமீர்கான் புரோடக்ஷன் இதே பாணியில் ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ என்ற மற்றுமொரு திரைப்படத்தை வெளியிடவுள்ளது. இப்படத்தைப் பற்றி கூறுகையில், “தங்கல்’ ஐப் போன்று ஒரு வித்தியாசமான பார்வையால் பெண்களைக் காட்டும். நம் நாட்டில் இன்றும் பல பகுதிகளில் மகன் மற்றும் மகள் சமமாக நடத்தப்படுவதில்லை.இந்த படம் ஒரு பெண் குழந்தைகள் உரிமையை அடிப்படையாகக் கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.

தங்கல் படத்தில் நடித்த ஸைரா வாசிம் இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தங்கல் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ பிரபல பாடகியாக விரும்பும் ஒரு இளம் பெண் மற்றும் இதற்கு சம்மதிக்க மறுக்கும் தந்தையின் கதையாகும். இந்தப் பெண் தன் தந்தைக்கு எதிர்ப்பை மீறி எப்படி வெற்றிகொள்கிறார் என்பதில் இந்தக்கதையின் முக்கியத்துவத்தை உருவாக்குகிறது.”, இயக்குனர், அட்வைத் சௌஹான்.

அக்டோபர் 20 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.