நாங்கள் ஒருவருக்கொருவர் உயிரையும் கொடுப்போம் –தனுஷின் பாலிவுட் அண்ணன்!

பாலிவுட்டில் தனுஷின் அறிமுகப் படமான “ராஞ்சனா” டைரக்டர் செய்தவர் ஆனந்த் ராய். இவர்களது கூட்டணியில் மீண்டும் ஒரு படம் தயாராகவுள்ளதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

டைரக்டர் ஆனந்தைப் பற்றி தனுஷ் கூறுகையில், “வெற்றிமாறனுடனான எனது நட்பு நம்பிக்கையை அடிப்படையாய் கொண்டது. ஆனந்துடனான நட்பு அன்பை அடிப்படையாய் கொண்டது. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டோம். ஆனந்த் எனக்கு பெரிய அண்ணன் போன்றவர். அண்ணி எனக்கு இன்னொரு அம்மா போன்றவர். அவர்கள் இருவருக்கும் என் மனதில் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. “ராஞ்னா” படப்பிடிப்பின் போது அவர்கள் காட்டிய அன்பும் அக்கறையும் இன்றும் நான் மறக்கவில்லை” என்று மிகுந்த செண்டிமென்டாகப் பேசியுள்ளார்.

தனது அடுத்த இந்தி திரைப்படத்தைப் பற்றி மேலும் கூறுகையில், “ஆனந்த ஷாருக்கான் வைத்து இயக்கம் படத்தை முடித்தவுடன், அடுத்த ஆண்டின் இறுதியில் அநேகமாகத் தொடங்கும்.” என்றார். தனுஷ் தற்போது, “என்னை நோக்கி பாயும் தோட்டா” , “மாரி 2” மற்றும் “வட சென்னை” என்ற படங்களில் பிஸியாக உள்ளார்.